கொழும்பில் கிரிக்கெட்:யாழில் கைது!





இந்திய மீனவர்களிற்கு எதிரான இலங்கை கடற்படை நடவடிக்கைகள் மீண்டும் முடுக்கப்பட்டுள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) இரவு மற்றும் திங்கட்கிழமை (16) அதிகாலை, யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதிக்கு அருகில் இலங்கை கடற்பரப்பில் சிறப்பு தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டதாக அரசு அறிவித்துள்ளது.

அதன்போது இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகுகள் இரண்டை கைப்பற்றி இந்திய மீனவர்கள் 25 பேரை கைது செய்துள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட இந்திய மீன்பிடி படகுகள் மற்றும் இந்திய மீனவர்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் மயிலிட்டி கடற்றொழில் திணைக்களத்திடம்; ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் இலங்கை மைதானத்தில் இந்திய –பாகிஸ்தானிய வீரர்களிற்கிடையே கிரிக்கட் சுற்றுப்போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்த சமநேரத்தில் தமிழக மீனவர்கள் கைது வேட்டை நடந்தேறியுள்ளது.

No comments