சுமா விடயத்தில் கவனம் தேவை!
ஏம்.ஏ.சுமந்திரனிடம் மாத்திரம் கொஞ்சம் கவனமாக இருங்கள் சிவஞானம் சிறீதரன் அவர்தான் இன்றைக்கு உங்கள் பின்னால் அடிக்கடி வந்துகொண்டிருக்கிறார் என இலங்கை நாடாளுமன்றில் அமைச்சர் சந்திரசேகர எச்சரித்துள்ளார்.
இலங்கை தமிழரசு கட்சி இன்று சீரழிவின் விளிம்பில் நிற்கிறது. கட்சியை எம்.ஏ.சுமந்திரனிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள் எனவும் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசுகட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிற்கு தொடர்ச்சியான அழுத்தங்களை பிரயோகிப்பதன் மூலம் கட்சியிலிருந்து வெளியேற்ற அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வைக்கும் சதிகள் உள்ளிருந்து உச்சமடைந்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் யாழ்.தேர்தல் மாவட்டத்திலிருந்து சிவஞானம் சிறீதரன் மட்டுமே வெற்றியடைந்திருந்தார். இந்நிலையில் ஏனையோரது தேர்தல் வெற்றி பற்றி அவர் அக்கறை கொள்ளவில்லையென்ற குற்றச்சாட்டு;க்கள் எம்.ஏ.சுமந்திரன் தரப்பினால் முன்வைக்கப்பட்டுவருகின்றது.
இந்நிலையில் தொடர்ச்சியாக தென்னிலங்கை அரசியல் சக்திகளது ஆதரவுடன் உள்வீட்டு மேற்பார்வையில் அவர் மீது சேறடிப்புக்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளதாக சிவஞானம் சிறீதரன் ஆதரவு தரப்புக்களால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டேவருகின்றது.

Post a Comment