ஸ்பெயினில் அதிவேக தொடருந்து மோதிய விபத்தில் குறைந்தது 39 பேர் பலி!
ஸ்பெயினில் தொடருந்து விபத்தில் குறைந்தது 39 பேர் இறந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர் என்று ஸ்பெயினின் சிவில் காவல்படை தெரிவித்துள்ளது.
மாட்ரிட் செல்லும் தொடருந்துப் பெட்டிகள் தடம் புரண்டு எதிர் தண்டவாளத்தில் கடந்து, கோர்டோபா நகருக்கு அருகிலுள்ள அடமுஸில் எதிரே வந்த ரயிலில் மோதின. இதனால் இந்த விபத்து ஏற்பட்டது.
இரண்டு தொடருந்துகளில் நானூறு பயணிகள் மற்றும் ஊழியர்கள் இருந்தனர். குறைந்தது 73 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 24 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் நான்கு குழந்தைகள் அடங்குவதாக அண்டலூசியாவின் அவசர சேவைகள் தெரிவிக்கின்றன.
அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கிய நிலையில், ஸ்பெயின் போக்குவரத்து அமைச்சர் ஆஸ்கார் புவென்ட் இந்த சம்பவத்தை மிகவும் விசித்திரமானது என்று விவரித்தார்.
அரசாங்கத்தால் ஆலோசிக்கப்பட்ட அனைத்து ரயில்வே நிபுணர்களும் விபத்தால் மிகவும் குழப்பமடைந்துள்ளனர் என்று புவென்ட் மாட்ரிட்டில் செய்தியாளர்களிடம் கூறினார்.
உள்ளூர் நேரப்படி மாலை 6:40 மணிக்கு மாட்ரிட் நோக்கிச் சென்ற தொடருந்து மலகாவிலிருந்து புறப்பட்ட பத்து நிமிடங்களுக்குப் பின்னர் இந்த விபத்து ஏற்பட்டதாக தொடருந்து இயக்குநர்ன ஆபரேட்டர் அடிஃப் தெரிவித்தார்.
கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலோர் மற்றும் காயமடைந்தவர்கள் மாட்ரிட்டில் இருந்து ஹுல்வாவுக்குச் சென்று கொண்டிருந்த இரண்டாவது ரயிலின் முன் பெட்டிகளில் இருந்தவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
விபத்தில் சிக்கிய தொடருந்து வகை ஃப்ரீசியா 1000 ஆகும். இது மணிக்கு 400 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது என்று இத்தாலிய தொடருந்து நிறுவனமான ஃபெரோவி டெல்லோ ஸ்டாட்டோவின் செய்தித் தொடர்பாளர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
தொடருந்துகளின் சிதைவுகள் உருக்குலைந்ததால், பெட்டிகளுக்குள் சிக்கியவர்களை மீட்பது கடினமாக இருந்ததாக மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.

Post a Comment