புனின் இல்லம் மீது ட்ரோன் தாக்குதல்: பேச்சுவார்த்தை நிலைப்பாடு மறுபரிசீலனை செய்யப்படும் ரஷ்யா


புடினின் இல்லத்தின் மீது உக்ரேனிய ட்ரோன் தாக்குதல் இன்று திங்கட்கிழமை நடத்தியதைத் தொடர்ந்து அமைதிப் பேச்சு சுவார்த்தைகளில் ரஷ்யா தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யும் என்று ஜனாதிபதி விளாடிமிர் புடின் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிடம் கூறினார்.

இன்று திங்கட்கிழமை புடினும் டிரம்பும் பேசியதாகவும், உக்ரைனுடனான வாஷிங்டனின் பேச்சுவார்த்தைகள் குறித்து டிரம்ப் மற்றும் அவரது மூத்த ஆலோசகர்களால் புடினுக்கு விளக்கப்பட்டதாகவும் கூறினார் என ரஷ்யாவின் வெளியுறவுக் கொள்கை உதவியாளர் யூரி உஷாகோவ் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:-

நோவ்கோரோட் பகுதியில் உள்ள ஒரு ஜனாதிபதி இல்லத்தை உக்ரைன் தாக்கியதாக புடின் கூறியபோது டிரம்ப் அதிர்ச்சியடைந்தார்.

ரஷ்யாவின் நிலைப்பாடு மறுபரிசீலனை செய்யப்படும் என்று உஷாகோவ் கூறினார். இது முந்தைய மற்றும் எதிர்கால பேச்சுவார்த்தைகளை பாதிக்கும் என்று வலியுறுத்தினார்.

முன்னதாக, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, புதினின் இல்லத்தின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுவதை முழுமையான கட்டுக்கதை என்றும், டிரம்புடனான தனது சந்திப்பின் முடிவுகளை ரஷ்யா குறைமதிப்பிற்கு உட்படுத்த முயற்சிப்பதாகவும் கூறினார்.

நோவ்கோரோட் பகுதியில் ஜனாதிபதி விளாடிமிர் புடினின் டச்சா மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுவதைத் தொடர்ந்து, மாஸ்கோவின் பேச்சுவார்த்தை நிலைப்பாடு மாறும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் திங்களன்று தெரிவித்தார்.

இதுபோன்ற பொறுப்பற்ற செயல்களுக்கு பதில் கிடைக்காமல் போகாது என்று இன்டர்ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்திடம் லாவ்ரோவ் கூறினார். 

இன்று திங்கட்கிழமை இரவு வால்டாய் என்றும் அழைக்கப்படும் ஜனாதிபதி அரசு இல்லத்தை குறிவைத்து உக்ரைன் 91 நீண்ட தூர ட்ரோன்களை ஏவியதாக அவர் குற்றம் சாட்டினார்.

தாக்குதல் நடந்ததாகக் கூறப்படும் போது புடின் வீட்டில் இருந்தாரா என்பதை லாவ்ரோவ் தெளிவுபடுத்தவில்லை.

No comments