வெளிநாட்டு ஒப்பந்தத்திற்கு கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் கைது
வெளிநாட்டில் இருந்து வந்த உத்தரவுக்கு அமைய யாழ்ப்பாணத்தில் கஞ்சா போதைப்பொருளை கடத்தி சென்ற பிரதேச சபை உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நபர் ஒருவர் போதைப்பொருளை போதை வியாபாரி ஒருவரிடம் கஞ்சா போதைப்பொருளை கைமாற்றம் செய்ய போதைப்பொருளுடன் பயணிப்பதாக யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நல்லூர் சங்கிலியன் பூங்காவிற்கு அண்மையாக வைத்து அந்நபரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் , அவரது உடைமையில் இருந்து 4 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளை மீட்டுள்ளனர்.
அதனை அடுத்து அவரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை தான் நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினர் எனவும் , வெளிநாட்டில் இருந்து வந்த ஒப்பந்தம் ஒன்றின் அடிப்படையில், ஒரு நபரிடம் இருந்து இதனை பெற்று , யாழ் நகர் பகுதிக்கு வரும் ஒருவரிடம் அதனை கையளிக்க சென்றதாக கூறியுள்ளார்.
குறித்த நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள அதேவேளை , குறித்த நபரிடம் கஞ்சா போதைப்பொருளை கொடுத்தவர் மற்றும் , அதனை வாங்க காத்திருந்தவர் தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Post a Comment