காரணமென்ன? : முன்னாள் போராளி மரணம்!



முன்னாள் அமைச்சர் டக்ளஸ் மீதான தாக்குதலில் கைதாகி சிறையிலிருந்த சபாரட்ணம் நகுலேஸ்வரன் மரணம் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அவர் பல வருட சிறை வாழ்க்கையின் பின்னராக 2002ம் ஆண்டு சமாதான காலப்பகுதியில்  விடுதலையானார்.

அதே சமயம் 2009ம் ஆண்டு அவருக்கு எதிராக புதிதாக தொடுக்கப்பட்ட வழக்கிற்கு செல்லாத காரணத்தால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்தது.

டக்களஸ் தேவானந்தாவை களுத்துறை சிறைச்சாலையில் தாக்கியமை தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 16 பேரின் ஆறு பேர் தவிர்ந்த ஏனையோர் விடுதலையாகி இருந்தனர். அதேவேளை ஆறு பேருக்கும் தண்டனையும் முடிந்து விட்டது.

இந்நிலையில் சபாரட்ணம் நகுலேஸ்வரன் அவர்கள் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக கொழும்பில் கணக்காளராக பணி புரிந்துவருகின்றார். 

இந்நிலையில் அவர் குற்றப்புலனாய்வுப்பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில்  சந்தேகத்திற்கிடமான முறையில் மரணமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments