நாவலியில் துப்பாக்கி ரவைகளை மீட்ட பொலிஸ் விசேட அதிரடி படையின் குண்டு செயலிழக்க செய்யும் பிரிவினர்
யாழ்ப்பாணத்தில் காணி ஒன்றின் மலசல கூட குழியில் காணப்பட்ட பெருந்தொகையான துப்பாக்கி ரவைகள் நீதிமன்ற அனுமதியுடன் மீட்கப்பட்டுள்ளது.
நவாலி வடக்கில் நீண்டலமாக பராமரிப்பு இன்றி காணப்பட்ட காணி ஒன்றினை அதன் உரிமையாளர் நேற்று முன்தினம் வியாழக்கிழமை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அதன் போது காணிக்குள் இருந்த மலசல கூடத்தின் குழியின் மேல் மூடி உடைந்த நிலையில் காணப்பட்டதை அடுத்து , குழிக்குள் பார்த்த வேளை அதனுள் பெருமளவான துப்பாக்கி ரவைகள் காணப்பட்டுள்ளது.
அது தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து , சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் துப்பாக்கி ரவைகளை பார்வையிட்டு சென்றனர்.
துப்பாக்கி ரவைகளை மீட்க மல்லாகம் நீதிமன்றில் அனுமதி கோரிய நிலையில் நீதிமன்ற அனுமதி கிடைத்ததும் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை பொலிஸ் விசேட அதிரடி படையின் குண்டு செயலிழக்க செய்யும் பிரிவினரால் குழியில் இருந்து துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டன
அதன் போது 1015 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment