மருதங்கேணியில் வெடிக்காத நிலையில் வெடிகுண்டுகள்


யாழ்ப்பாணம் மருதங்கேணி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மண்டலாய் பகுதியில் தனியார் காணியில் இருந்து வெடிக்காத நிலையில் மூன்று வெடிகுண்டுகள் இனங்காணப்பட்டுள்ளது

குறித்த காணியினை காணி உரிமையாளர் துப்பரவு செய்ய வேளை காணிக்குள் வெடிக்காத நிலையில் வெடிகுண்டுகள் காணப்பட்டமையை அடுத்து அது குறித்து மருதங்கேணி பொலிசாருக்கு தெரியப்படுத்திய போது சம்பவ இடத்திற்கு சென்ற மருதங்கேணி பொலிசார் அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தனர். 

வெடிகுண்டுகளை மீட்பதற்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் அனுமதி கோரவுள்ளதாகவும் , நீதிமன்ற அனுமதி கிடைத்தவுடன் வெடிகுண்டுகளை மீட்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

No comments