பேசாலை பொலிஸ் நிலைய தடுப்பு காவலில் இளைஞன் உயிரிழப்பு - பொலிஸார் தாக்கியதால் மகன் உயிரிழந்ததாக தாயார் குற்றச்சாட்டு
மன்னார் பேசாலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் தடுப்புக்காவலில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வவுனியா கூமாங்குளத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் கபிலன் (வயது 34) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பேசாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டாஸ்பத்திரி பகுதியில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபரை பொலிஸார் பேசாலை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, தடுப்புக்காவலில் வைத்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
அந்நிலையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை தடுப்பு காவலில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபரின் தாய், பேசாலை பிரதேச வைத்தியசாலைக்கு வந்து, பொலிஸார் தனது மகனை அடித்துக் கொன்றதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் , சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
Post a Comment