யாழில். எலி எச்சங்களுடன் உணவு பொருளை விற்பனைக்கு வைத்திருந்த உரிமையாளருக்கு தண்டம்
பருத்தித்துறையில் எலி எச்சங்களுடன் கூடிய உணவு பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் பல்பொருள் அங்காடி உரிமையாளருக்கு 60 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை நகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள உணவு கையாளும் நிலையங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் பொது சுகாதார பரிசோதகர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, வண்டு மொய்ந்த உணவுப்பொருட்களையும் காலாவதி கடந்த உணவுப்பொருட்களையும் எலி எச்சங்களுடன் கூடிய உணவுப்பொருட்களையும் பூஞ்சணம் மொய்த்த உணவுப்பொருட்களையும் விற்பனைக்கு வைத்திருந்த குற்றச்சாட்டில் பல்பொருள் அங்காடி உரிமையாளருக்கு எதிராக பருத்தித்துறை நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு விசாரணையின் போது, தன் மீதான குற்றச்சாட்டை உரிமையாளர் ஏற்றுக்கொண்டதை அடுத்து , உரிமையாளரை கடுமையாக எச்சரித்த மன்று , உரிமையாளருக்கு 60 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது.
Post a Comment