ஆத்மா சாந்தியடையாது:கவலையில் நாமல்!
வாசிம் தாஜுதீன் கொலை போன்ற குற்றங்களை நாட்டை ஆண்ட ஆட்சியாளர்களே செய்ததாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க குற்றஞ்சுமத்தியுள்ளார்.
கொலைக்குற்றங்களை கிராமத்தில் ஊரில் இருக்கும் சிறிபால அல்லது ஞானரத்னம் செய்யவில்லை. அந்த குற்றங்களை நாட்டை ஆண்ட ஆட்சியாளர்களே செய்தனர். அவர்கள் குற்றங்களை மூடி மறைத்தனர்.
வாசிம் தாஜுதீன் 2012 இல் கொலை செய்யப்பட்டார், 2015 இல் பத்திர மோசடி மற்றும் 2019 இல் ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தாக்குதல்கள் செய்யப்பட்டன. சம்பந்தப்பட்டவர்கள் அரசியல்வாதிகளா இல்லையா என்பது குறித்த விசாரணைகளின் அடிப்படையில் சட்டம் செயல்படுத்தப்படும்," என்று அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அத்தகைய விசாரணைகளில் அரசாங்கம் தலையிடாது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே வாசிம் தாஜுதீனின் மரணம் குறித்து அரசாங்கம் பாரபட்சமற்ற மற்றும் விரிவான விசாரணையை நடத்த வேண்டும் என்றும், அதை அரசியல் மயப்படுத்த முயற்சிக்கக்கூடாது என்றும், இல்லையெனில் அது அவரது மறைந்த ஆன்மாவை அவமதிப்பதாக இருக்கும் என்றும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அண்மையில் தென்னிலங்கையில் தனது இருகுழந்தைகளுடன் படுகொலை செய்யப்பட்ட பாதாள உலக கும்பல் பிரமுகர், 2012 இல் தாஜுதீன் இறப்பதற்கு முன்பு அவரைப் பின்தொடர்ந்த வாகனத்தில் இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.
மகிந்த மற்றும் அவரது மகன்கள் சார்பில் படுகொலைகளை முன்னெடுத்த நபர் வாசிம் தாஜுதீனின் மரணம் குறித்து அம்பலப்படுத்தப்போவதாக சமூக ஊடகங்களில் வெளிப்படுத்திய நிலையில் தனது குழந்தைகளுடன் பயணித்துக்கொண்டிருந்த போது படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
Post a Comment