காற்றாலை விவகாரம்:பிணை!
மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் உள்ளடங்களாக போராட்டத்தில் ஈடுபட்ட 6 சந்தேகநபர்களையும் பிணையில் செல்ல மன்னார் நீதிமன்றம் இன்று அனுமதித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு எடுத்து வரப்பட்ட காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கான பொருட்களை மன்னார் நகருக்குள் எடுத்து வர வேண்டாம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக காவல்துறையினர் மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
வழக்கு இன்று (01.10) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே குற்றஞ்சாட்டப்பட்டவர்களை பிணையில் செல்ல அனுமதித்திருந்தார்.
அதேவேளை, வழக்கு விசாரணைகள் மீண்டும் எதிர்வரும் நவம்பர் மாதம் 17 ஆம் திகதி விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
எதிர்ப்பு போராட்டத்தில் காவல்துறையினரின் தாக்குதலில் காயமடைந்த மூவர் மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர்களுக்கு எதிராகவும் காவல்துறையினர் மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இதனிடையே காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய முடக்க போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.
Post a Comment