பொலிகண்டியில் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகில் தீ


யாழ்ப்பாணத்தில் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகொன்று தீக்கிரையாகியுள்ள நிலையில் , படகில் இருந்த கடற்தொழில் உபகரணங்களும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. 

வடமராட்சி பொலிகண்டி பகுதி கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகொன்று இன்றைய தினம் புதன்கிழமை மதியம் திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது. 

அதனை அவதானித்த கடற்தொழிலாளர்கள் படகில் பற்றிய தீயினை அணைக்க முயன்ற போதிலும் படகின் பெரும் பகுதியில் தீயில் எரிந்துள்ளதுடன் , படகில் இருந்த வலைகள் உள்ளிட்ட கடற்தொழில் உபகரணங்களும் தீயில் எரிந்துள்ளன. 

படகு தீ பிடித்தமை தற்செயலானதா ? அல்லது படகிற்கு தீ வைக்கப்பட்டதா என்பது தொடர்பில் தெரியவராத நிலையில் ,  வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments