முகமாலையில் குண்டுகள் மீட்பு
கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முகமாலை வடக்கு பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை வெடிக்காத நிலையில் 31 குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன
குறித்த பகுதியில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவர் தமது வீட்டினை சுத்தம் செய்யும் போது பள்ளம் தோண்டி உள்ளார். அதன் போது கிடங்கினுள் ஆபத்தான நிலையில் வெடிக்காத குண்டுகள் காணப்பட்டுள்ளன.
அது தொடர்பில் உடனடியாக வீட்டு உரிமையாளர் பளை பொலிஸார்க்கு அறிவித்தார்.
அறிவித்தலில் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் . குறித்த வெடிகுண்டுகளை மீட்பதற்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் அனுமதி கோரியுள்ளனர்.
நீதிமன்ற அனுமதி கிடைத்ததும் வெடிகுண்டுகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment