கைதாகி பிணை:நாமல் ஓடிவந்தார்?
சுயேட்சைக்குழு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்ட போது அவரை தேடி நாமல் வருகை தந்திருந்தமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.
கொழும்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு இன்று பிற்பகல் பிணை வழங்கப்பட்டுள்ளது.
வீதி போக்குவரத்து விதிகளை மீறியமை தொடர்பில் வாக்குமூலம் அளிக்க கோட்டை காவல் நிலையத்திற்கு இன்று சென்றபோது அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
அண்மையில் கொழும்பில் நடைபெற்ற போராட்டமொன்றில் கலந்து கொண்ட பின்னர், கோட்டை காவல் நிலையத்தில் காவல் அதிகாரியின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில் இராமநாதன் அர்ச்சுனாவின் வீதி ஒழுங்கை மீறிய விவகாரம் பேசு பொருளாகிய நிலையில் கைதாகி பிணை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவரது விடுதலைக்காக நாமல் தரப்பு பாடுபட்டமை பேசு பொருளாகியுள்ளது.
Post a Comment