மாகாண சபை தேர்தலை நடத்துங்கள் - வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள் கூட்டாக கோரிக்கை
தற்போதைய அரசாங்கம் மாகாண சபை முறைமைக்கு எதிராக கடந்த காலங்களில் செயற்பட்டவர்கள் எனவே அவர்கள் மாகாண சபை தேர்தலை நடத்துவார்கள் என்பதில் எமக்கு நம்பிக்கை இல்லை என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
யாழில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான தமிழரசு கட்சி உறுப்பினர் இமானுவேல் ஆர்னோல்ட், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர் தவநாதன், ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர் சர்வேஸ்வரன், ரெலேவின் உறுப்பினர் சபா குகநாதன் மற்றும் புளொட் கட்சியின் உறுப்பினர் கஜதீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
குறித்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த மாகாண சபையின் காத்திரமான பங்களிப்பு தொடர்பாகவும், மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டிய அவசியம் தொடர்பில் கலந்துரையாடி இருந்தோம்.
தமிழர்களுக்கான அரசியல்களமாக மாகாண சபையே உண்டு. சுமார் 08 வருடங்களாக மாகாண சபை தேர்தல் நடைபெறவில்லை. மாறி மாறி வந்த அரசாகங்கள் நடத்தவில்லை.
தற்போதைய அரசாங்கம் கடந்த காலத்தில் மாகாண முறைமைக்கு எதிரானவர்களாக இருந்தவர்கள். இவர்களும் மாகாண சபை தேர்தலை நடத்துவார்களா என்ற சந்தேகம் உள்ளது.
தேர்தலை மிக விரைவாக முன்னெடுக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.
மாகாண சபை தேர்தல் தொடர்பில் ஜனதிபதி , அமைச்சர்களின் கருத்துக்கள் பல சந்தேகங்களை தோற்றுவிக்கின்றன.
புதிய முறை பழைய முறை என காலம் தாழ்த்தது, பழைய முறைப்படி தேர்தலை நடத்த வேண்டும்.
தமிழ் மக்களுக்கான தீர்வாக மாகாண சபை இருக்கப்போவதில்லை. ஆனால் எழுத்து வடிவில் உள்ளதாக மாகாண சபை முறைமையே உள்ளது. அதனை பயன்படுத்தி தமிழர்கள் தமக்கான தீர்வை நோக்கி பயணிக்க கூடியதாக இருக்கு்.
அதனையே கடந்த காலங்களில் மாறி மாறி வந்த அரசாங்கங்கள் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு சாக்கு போக்குகளை கூறி காலம் தாழ்த்தி வருகின்றனர்.
தமிழர்களுக்கான அரசியல் தீர்வு என இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் கிடைக்கப்பெற்றது. இந்த மாகாண சபை முறைமையே தமிழ் மக்களுக்கான தீர்வின் ஆரம்ப புள்ளியாக பலரும் ஏற்றுக்கொண்டனர்.
எனவே மற்றைய மாகாணங்கள் தென்னிலங்கைக்கு இது மாகாண சபை தேவையற்றதாக இருக்கலாம். ஆனால் தமிழர்களுக்கு அவ்வாறு இல்லை.
மாகாண அதிகாரிகள் தங்கள் இஷ்டத்திற்கும் மத்தியின் நிகழ்ச்சி நிரலுக்கும் ஏற்ப செயற்படுகின்றனர். இதானல் தமிழ் மக்கள் இருப்பு கேள்விக்குறியாக உள்ளது.
தெற்கில் மாகாண சபை தேர்தல்களை நடாத்தாவிடினும் வடக்கு - கிழக்கு தமிழ் மக்களின் இருப்பையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்கு வடக்கு - கிழக்கு மாகாண சபைகளின் தேர்தலை நடத்த வேண்டும் என தெரிவித்தனர்.
Post a Comment