மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதான காணிக்குள் துப்பாக்கி ரவைகள்


யாழ்ப்பாணத்தில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமையப்பெறவுள்ள காணிக்குள் இருந்து ஒரு தொகை துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மண்டைதீவு பகுதியில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்நிலையில்  நேற்றைய தினம் சனிக்கிழமை மைதானம் அமையவுள்ள காணிகளை துப்பரவு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட போது, குழாய் ஒன்றுக்குள் இருந்து ரி - 56 ரக துப்பாக்கிகளின் ஒரு தொகை ரவைகள் காணப்பட்டன. 

அதனை தொடர்ந்து, அவை தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து , பொலிஸார் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற அனுமதி பெற்று  ரவைகளை மீட்டுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

No comments