54நாட்களில் 240!

 


செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வு  2ஆம் கட்டம், 45ஆம் நாள் முடிவுக்கு வந்துள்ளது. சுமார் 45 நாட்கள் நடைபெற்ற செம்மணி மனிதப்புதைகுழி இரண்டாம் கட்ட அகழ்வே இன்று நிறைவுற்றுள்ளது. 

இதனால், முதல் மற்றும் இரண்டாம் கட்டங்களை இணைத்து மொத்தமாக 54 நாட்கள் அகழ்வு நடைபெற்றுள்ளது. முதல் கட்டம் – 9 நாட்கள், இரண்டாம் கட்டம் – 45 நாட்கள் அகழ்வு பணிகள் நடைபெற்றிருந்தது.

இதுவரை 240 மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன. அதில் 239 முழுமையாக எடுக்கப்பட்டுள்ளன.

அடுத்த கட்ட நடவடிக்கைகள் வரும் செப்டம்பர் 18ஆம் தேதி நடைபெறும் நீதிமன்ற விசாரணை முடிவின் பேரில் தீர்மானிக்கப்படுமெனவும் அந்நாளில் இடைக்கால நிபுணர் அறிக்கையும், செலவுத் திட்டமும் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments