செம்மணி:தெரியாத புதிர்?
செம்மணிப் புதைகுழியில் தொடர்ந்தும் சிறார்களது நம்பப்படும் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுவருகின்ற நிலையில் சந்தேககங்கள் வலுத்துள்ளது.
1996 முதல் 2000ம் ஆண்டுவரையான காலப்பகுதியில் சிறார்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் தகவல்களற்றேயுள்ளது.
இந்நிலையில் மீட்கப்படும் மனித எச்சங்கள் தொடர்பில் சந்தேகங்கள் வலுத்துவருகின்றது.
இன்று மேலும் நான்கு மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. சில எச்சங்கள் சிக்கலான குவியலில் காணப்பட்டதாகவும் தெரியவருகின்றது. இதுவரைகாலமும் அடையாளம் காணப்பட்ட மொத்த எலும்புக்கூடுகள் எண்ணிக்கை 222 ஆக உயர்ந்துள்ளநிலையில் அவற்றில் 206 முழுமையாக தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி புதைகுழியின் இன்றைய அகழ்வு பணிகளின் போது பெரிய எலும்பு கூட்டு தொகுதியின் தோள் பட்டையுடன் , தொடுகையுற்றவாறு , ஒப்பிடளாவில் சிறிய எலும்பு கூட்டு தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ளது.
எலும்பு கூடுகளை சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் , அவை நாளைய தினம் முற்றாக அகழ்ந்து எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை , கடந்த நாட்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, மூன்று சந்தர்ப்பங்களில் ஒன்றன் மேல் ஒன்றாக 06 எலும்பு கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் , தற்போது மேலும் இரு எலும்பு கூட்டு தொகுதிகள் ஒன்றுடன் ஒன்று தொடுகையுற்ற நிலையில் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Post a Comment