ரவிகரன் வட்டுவாகலில்!
இனஅழிப்பு யுத்தத்தின் வரலாறாக உள்ள வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகள் இலங்கை ஜனாதிபதியால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியாக அனுர குமார திசநாயக்க பதவியேற்று ஒருவருட காலம் பூர்த்தியாவதனை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்களின் ஆரம்ப நிகழ்வுகளை ஆரம்பித்து வைக்க இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திஸநாயக்க வடக்குக்கு விஜயம் செய்துள்ளார் .
முpக நீண்டகால கோரிக்கையாக இருந்த வட்டுவாகல் பால நிர்வாகப் பணிகளை ஆரம்பிக்க வந்திருந்த ஜனாதிபதி அவர்களுடன் தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனும் இணைந்திருந்தார்.
எனினும் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நேற்றைய நிகழ்வுகளில் ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவிர்ந்த ஏனைய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவருமே இணைந்திருக்கவில்லை.
தொடர்ந்து பால நிர்மாணப் பணிக்கான பெயர்ப்பலகையை ஜனாதிபதி திறந்து வைத்து மக்கள் மத்தியில் உரை நிகழ்த்தியிருந்தார்.நிர்மாணப்பணிகள் 2027ம் ஆண்டில் முடிவுறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கடற்றொழில் அமைச்சர் சந்திர சேகரம், பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, வன்னி மாவட்ட நாடாமன்ற உறுப்பினர்களான திலகநாதன், ஜெகதீஸ்வரன்,ரவிகரன் மதகுருமார்கள், திணைக்களங்களின் அதிகாரிகள் , தவிசாளர்கள், உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment