முல்லைத்தீவில் விபத்து - ஒருவர் உயிரிழப்பு


முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடையார்கட்டுப் பகுதியில் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 

யாழ்ப்பாணத்திலிருந்து - புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இதன்போது அதில் ஒரு மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

மற்றும் ஒருவர் காயமடைந்த நிலையில் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

No comments