கைது செய்த நபரின் ஏ.ரி.எம் அட்டையை பயன்படுத்தி பொருட்களை வாங்கிய பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது
பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரின் ஏ.ரி.எம் அட்டையை பயன்படுத்தி பொருட்கள் கொள்வனவு செய்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மாத்தறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கந்தர பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த பொலிஸ் உத்தியோகத்தர்,மாத்தறை - கந்தர பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவரின் ஏ.ரி.எம் அட்டையை பயன்படுத்தி பொருட்கள் கொள்வனவு செய்துள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த பொலிஸ் உத்தியோகத்தர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரை நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment