யாழில். நுளம்பு குடம்பியை பேணிய வீட்டு உரிமையாளருக்கு 10 ஆயிரம் தண்டம்


யாழ்ப்பாணத்தில் நுளம்பு குடம்பிகளை பேணிய குற்றச்சாட்டில் வீட்டு உரிமையாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. 

இணுவில் மற்றும் தாவடி பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட டெங்கு கட்டுப்பாட்டு களத்தரிசிப்பு நடவடிக்கைகளின் போது நுளம்பு பெருக்கத்திற்கேதுவான சூழலில் நுளம்பு குடம்பிகள் இனங்காணப்பட்டதையடுத்து வீட்டின் உரிமையாளரிற்கு எதிராக இணுவில் பொது சுகாதார பரிசோதகரால் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை வழக்கு தொடரப்பட்டது. 

வழக்கு விசாரணைகளின் போது, வீட்டு உரிமையாளர் தன் மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டதை அடுத்து, உரிமையாளரை எச்சரித்த மன்று 10 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது. 

மழைகாலம் தொடரவுள்ளதால் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவும் அபாயமுள்ளதால் அப்பகுதி மக்கள் அனைவரையும் விழிப்புடன் செயற்படுமாறும், எதிர்வரும் காலங்களிலும் இதுபோன்ற கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடரும் என பொது சுகாதார பரிசோதகர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


No comments