'நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி'
நல்லூர்க் கந்தசுவாமி ஆலய பெரும் திருவிழா காலத்தில் 'நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி' என்னும் தொனிப்பொருளில், நல்லூர் பாரதியார் சிலைக்கு அண்மையாகவுள்ள நெசவு கைத்தொழிற் பயிற்சி நிறுவன வளாகத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள கண்காட்சி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கண்காட்சியானது எதிர்வரும் 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரையில் காலை 9 மணி தொடக்கம் இரவு 9 மணி வரை நடைபெறவுள்ளது.
Post a Comment