அதானிக்கு அனுமதியில்லையா?
இந்தியாவின் அதானி குழுமத்திற்கான காற்றாலை அனுமதியை அனுர அரசு மறுதலித்துள்ள நிலையில் மன்னாரிற்கு வரவுள்ள காற்றாலை தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளது.
மன்னார் தீவு பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தேவருகின்றனர்.தற்போது மன்னார்-மதவாச்சி பிரதான வீதியூடாக கொண்டு வரப்பட்டு கொண்டு இருக்கும் காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கான பொருட்களை மன்னார் நகருக்குள் கொண்டு வருவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து மன்னார் மக்கள் திங்கட்கிழமை (4) அன்று காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் ஒன்று கூடியிருந்தனர்.
புதிதாக அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரங்களுக்கு மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை (3) அன்று மன்னார் நகருக்குள் கனரக வாகனங்களில் கொண்டு வரப்பட்டு கொண்டிருந்த காற்றாலை மின் கோபுரம் அமைப்பதற்கான பாரிய பொருட்கள் மடு பிரதான வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் பொருட்களை மன்னாருக்குள் கொண்டு வர மக்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாகவே மின் திட்ட நடவடிக்கைக்கான அமைச்சரவை அனுமதி பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதி தேர்தலின் போது மன்னாருக்கு வருகை தந்து மக்களின் எதிர்ப்பை மீறி காற்றாலை மின் உற்பத்தி திட்டம் முன் னெடுக்கப்படாது என தெரிவித்திருந்தார்.
எனினும் எதிர்வரும் புதன்கிழமை வரை தொடர்ச்சியாக ஒன்று கூடி தமது எதிர்ப்பை தெரிவிப்பது என்றும் மன்னார் நகருக்குள் காற்றாலை கோபுரங்கள் அமைப்பதற்காக கொண்டு வரும் பொருட்களை நகருக்குள் கொண்டு வர அனுமதிப்பதில்லை என்றும் மக்கள் முடிவு செய்து ஊடகங்களிற்கு அறிவித்துள்ளனர்.
Post a Comment