சூடும் அல்ல ! சொரணையும் இல்ல!!
முல்லைதீவு படைமுகாம் தகர்ப்பில் போது கொல்லப்பட்ட ஆயிரத்து ஜநூறு வரையிலான படைகளது உடலங்களை இலங்கை அரசு பொறுப்பேற்க மறுத்திருந்தது.வவுனியா நோக்கி கொண்டு செல்லப்பட்ட உடலங்கள் திருப்பி அனுப்ப்பட அவற்றினை அடக்கம் செய்யும் பணி கிளிநொச்சி அரச அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
ஆனால் கிளிநொச்சி எங்கும் படை நடவடிக்கைகள் தொடர அரச அதிபரோ மரம் ஒன்றின் கீழ் தனது ஒற்றை கதிரை மற்றும் உடைந்த மேசை சகிதம் மக்களிற்கான சேவைகளை ஆற்றிய வண்ணமிருந்தார்.அவரிடம் பிக்கப் வாகனங்களோ பஜீரோக்களோ இல்லை.வெறும் நடைப்பயணமும் மீன்வாங்கும் பையொன்றே அலுவலக பையாகவுமிருந்தது,
உயிரிழந்த படையினரது உடலங்களை கௌரவமாக அடக்கம் செய்து தனது பணியை ஆற்றிய அப்போதைய அரச அதிபர் தற்போதும் அமையதியாக கொழும்பில் வாழ்வதாக தகவல்.
அண்மையில் வெளிவந்த சாதாரண தரப்பரீட்சை முடிவுகள் வடமாகாணத்தின் கல்வித்தகைமையினை தண்டவாளத்தில் ஏற்றிவைத்துள்ளது.
புதிய ஜனாதிபதி முதல் கல்வி அமைச்சர் வரை மாலை மரியாதை வேண்டாம்.பாடசாலை மாணவர்களிற்கு பாடசாலைக்கு வெளியே வேலை இல்லையென பக்கம் பக்கமாக அறிக்கை எழுதி வெளியிடுவது வழமையாகும்.
ஆனாலும் அமைச்சர்கள் முகம் கோணாத வகையில் அதிகாரிகளை நியமிப்பது அரசின் திருட்டு கொள்கையாகவே இருக்கின்றது.
அந்த கதைகள் ஒருபுறமிருக்க கிளிநொச்சி மண்ணின் மைந்தன் ஒருவரது சமூக ஊடக பதிவு கவனத்தை ஈர்த்துள்ளது.
“கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அண்மையில் பரபரப்பு.பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் ஆயிரக்கணக்கானோர் திரண்டு யாரையோ மாலை மரியாதைகள் சகிதம் வரவேற்கும் நிகழ்வு.கல்வியில் சாதித்த மாணவனோ அல்லது விளையாட்டுத்துறை சாதித்த மாணவனோவென எட்டிப்பார்த்த போது பதில் மாவட்ட செயலராக கடமையாற்றிய ஒருவரிற்கு நிரந்தர நியமனம் கிடைத்துவிட்ட கௌவிப்பாம்.
கிளிநொச்சி மாவட்ட அரச அதிபராக மாலைகள், பொன்னாடைகள், வாத்தியங்களுடன் வரவேற்பும் பதவியேற்கும் நிகழ்வாம் அது.
முன்னதாக கிளிநொச்சி மாவட்டத்தின் பதில் அரசாங்க அதிபராக பணியாற்றி வந்த அவர், அமைச்சரவை அனுமதியின் பேரில் நிரந்தர நியமனம் பெற்றதோடு, கடந்த 5ஆம் திகதி நியமனக் கடிதத்தை உத்தியோகபூர்வமாக பெற்றிருந்தாராம்.
இலங்கை நிர்வாக சேவை அதிகாரியான அவர், தெல்லிப்பளை மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளராகவும், யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி), கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் பதில் அரசாங்க அதிபராகவும் பணியாற்றிய அனுபவம் பெற்றவர் என முகநூல் பதிவுகள் தெரிவிக்கின்றன.
நல்லது. அவர் நல்ல சேவையாளனாக இருந்துவிட்டு போகட்டும்.பாடசாலை மாணவர்களது பான்ட் வாத்தியம் சக பணியாளர்களிடமிருந்து மிரட்டிப்பறிக்கப்பட்ட பணத்தில் மாலை மரியாதை பொன்னாடை எல்லாமும் தேவையாவென” அவர் நாக்கை புடுங்கி கேள்வி எழுப்பியிருந்தார்.
தற்போதைய சந்தையில் ஒரு மாலை ஆயிரம் முதல் ஆயிரத்து ஜநூறு வரைக்குமாக உள்ளநிலையில் நூற்றுக்கணக்கான மாலைகள் பொன்னாடைகள் என்ற கொண்டாட்டம் ஏன் என்ற கேள்விக்கு பதிலில்லை.
அதே கிளிநொச்சியிலேயே உணவின்றி தற்கொலைகள் அடிக்கடி அரங்கேறும் அவலம் நடந்து கொண்டிருக்கின்றது.கட்டுப்பாடற்ற சட்டவிரோத மதுபான உற்பத்தி திருட்டு மண் வியாபாரமென பாலியல் தொழிலென கிளிநொச்சி எங்கோ செல்கின்றது.
ஆனால் எங்களிற்கோ சூடு சொரணையே இல்லையாவென்கிறார் அந்த அனுதாபி.
யுத்த காலங்களில் பலர் கிளிநொச்சியில் அரச அதிபர்களாக பணியாற்றினர்.மக்கள் மனங்களில் அவர்கள் நிறைந்திருக்கின்றனர்.இன்றும் அவர்கள் மதிப்பு மிக்கவர்களாகவே பார்க்கப்படுகின்றனர்.
மறுபுறம் முன்னோடியாக யாழ்ப்பாண அரச அதிபரும் தனக்கு தானே மாலை திட்டத்தில் வரவேற்பை நடாத்திவிட ஏட்டிக்குபோட்டியாக கிளிநொச்சியிலும் அவை நடந்தேறியிருப்பதாக உள்ளக தகவல்கள் கூறுகின்றன.
ஆனால் தற்போதோ கதிரைக்கு வருமுன்னரே மாலை மரியாதைகள் பாடசாலை மாணவர்களது அணிவகுப்புக்கள் தேவையெனின் எவ்வாறு அவர்களால் நேர்மையாக பணியாற்ற முடியுமென்ற கேள்விக்கு பதில்தான் இல்லை. அனுர அரசும் ஒருவருடத்தினில் சொன்னவையெல்லாம் ஊருக்கே உபதேசம் உனக்கல்லவடி கதையாகியிருக்கின்றது.
Post a Comment