தேசபந்து தென்னக்கோனிற்கு கண்டம்!
கோத்தபாய அரசின் விசுவாசமான காவல்துறை அதிபராக இருந்த தேசபந்து தென்னகோன் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் முறைகேடுகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகங்கள் தொடர்பான விசாரணையில் சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என உறுதியாகியுள்ளது.
முறைகேடுகள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு அதனை அறிவித்துள்ளதாக சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்துள்ளார்.
தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்காக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்த குழுவின் அறிக்கை தம்மிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே கோட்டா கோ கம' மீதான தாக்குதலிலும் மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான மூத்த காவல்துறை அத்தியட்சகராக பணியாற்றி தேசபந்து தென்னகோனை சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார். தேசபந்து தென்னகோனை சந்தேக நபராகப் பெயரிடுமாறு சட்டமா அதிபர் பிறப்பித்த கடிதத்தை இரத்து செய்து, மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அந்த தீர்ப்பை அமல்படுத்துவதை நிறுத்தி வைத்து உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவை இன்று செவ்வாய்கிழமை பிறப்பித்துள்ளது
Post a Comment