செம்மணியில் பால் போச்சியும்?
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு பணிகள் 17ஆவது நாளாக தொடரும் நிலையில் ஆறு மாதங்களேயான வயதுடைய குழந்தையினது உடல என்பு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது.
இன்றைய அகழ்வில் மேலும் 8 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.இன்று அடையாளம் காணப்பட்டுள்ள எலும்புக்கூடுகள் அவதானிப்பின் அடிப்படையில் கைக்குழந்தைகள் உட்பட அனைத்தும் சிறு பிள்ளைகளின் எலும்புக்கூடுகளேயென மருத்துவ அதிகாரி தகவல் வெளியிட்டுள்ளார்.
அவற்றினுள் ஒரு கைக் குழந்தையினுடையது ஆறு மாதங்கள் கூட கடந்திராத சிசுவினுடையது என அனுமானிக்க முடிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.குறிப்பாக எச்சங்களில், 6 முதல் 7 வரை சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கும் வகையில்; அடையாளம் காணப்படுள்ளன . அதிலும் குறிப்பாக குழந்தைகள் அருந்தும் பால் போத்தல் வகையினை சேர்ந்ததென சேர்ந்ததென சந்தேகிக்கப்படும் பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
இன்றைய கண்டுபிடிப்புகளுடன், இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மொத்த எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது , இவற்றில் 65 எலும்புக்கூடுகள் ஏற்கனவே முழுமையாக தோண்டி எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment