புதைகுழிகளில் படுகொலை?



யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழிகளில் புதைக்கப்பட்டவர்கள் அங்கு அழைத்துவரப்பட்டு புதைகுழிகள் முன்பதாக கொல்லபட்டு புதைக்கப்பட்டிருப்பதான சந்தேகங்கள் வலுத்துவருகின்றது.

இன்றைய தினம் வியாழக்கிழமை செம்மணி மனித புதைகுழியில் 03 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் சிறிய பால் போத்தலும் சிறிய இரும்பு உருண்டைகள் சிலவும் மீட்கப்பட்டுள்ளன.

செம்மணி பகுதியில் "தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இரண்டு வiகைப்படுத்தப்பட்டு நீதிமன்றினால் அடையாளப்படுத்தப்பட்டு  அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இரண்டாம் கட்ட பணிகளுக்காக 45 நாட்கள் நீதிமன்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இரண்டாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம் 19 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.அதன்போது இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் புதன்கிழமை 09 எலும்பு கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன.

இதனிடையே செம்மணிக்கு அருகாமையில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி குரல் அற்றவர்களின் குரல் அமைப்பினால் முன்னெடுக்கப்படும் "விடுதலை" எனும் தொனிப்பொருளிலான போராட்டம் இன்று நல்லூர் கிட்டு பூங்காவில் முன்னெடுக்கப்படடிருந்தது.

சிறைவாழ்க்கை உணர் கண்காட்சி, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நாட்டப்படவுள்ள "விடுதலை மரத்துக்கான "  விடுதலை நீர் சேகரிப்பும் என்பவை உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.


No comments