செம்மணி : 90!



செம்மணி மனிதப்புதைகுழியில் இன்று வெள்ளிக்கிழமை மேலும் இரண்டு மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன.அதனையடுத்து இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மொத்த மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளது.

அவற்றில் 81 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து வெளியே எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தடயவியல் அகழ்வாய்வுத்தளம்  -2 இல்  எலும்புக்கூடு ஒன்று கண்டறியப்பட்டது. எனினும்  அவ்வெலும்புக்கூட்டினில்  சட்ட ரீதியிலான பிரேத பரிசோதனை செய்ததற்கான சான்றுகள்  உள்ளதாலும் முறையாக புதைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரிகள் நீதிமன்றின் கவனத்துக்கு தெரியப்படுத்தியிருந்தனர்.அதனையடுத்து அம்மனித எலும்புக்கூடு  தோண்டி எடுக்கப்படாது மீண்டும் மூடப்படுள்ளது.

புதைகுழி அமைத்துள்ள தளத்தில் எதிர்காலத்தில் செய்யப்படும் ஸ்கானிங் ஆய்வு பணிக்காக இன்று அகழ்வு பிரதேசத்தினை சூழவுள்ள பகுதிகள்  சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

மனிதப்புதைகுழி  தற்போது கண்டறியப்பட்ட பகுதிகளை தாண்டியும் நீடிக்கின்றதாவென்பதை கண்டறியவே ஸ்கானிங் ஆய்வு பணி முன்னெடுக்கப்படவுள்ளது.


No comments