கதிரை கவிழப்புக்களுடன் வடகிழக்கு?




வடகிழக்கில் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகளது குழச்சண்டைகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.யாழ்.மாநகரசபையில் இன்றைய தினம் மாதாந்த கூட்டத்தில் கட்சிகளது உறுப்பினர்கள் பகிரங்க வெளியில் ஆளாளுக்கு தாக்கிக்கொண்டனர்.

இதனிடையே வவுனியா மாநகர சபை பிரதி முதல்வருக்கு எதிரான வழக்கு 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.

கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வவுனியா மாநகரசபைக்குட்பட்ட வைரவ புளியங்குளம் வட்டாரத்தில் ஜனநாயக தேசிய கூட்டணி சார்பில் போட்டியிட்ட ப. கார்த்தீபன் 33 வாக்குகளை பெற்று தோல்வியடைந்திருந்தார்.

எனினும் அவரது கட்சிக்கு கிடைத்த போனஸ் ஆசனத்தினூடாக மாநகரசபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதுடன் பிரதி முதல்வராகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

எனினும் அவர் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபைக்குட்பட்ட வட்டாரத்திலேயே வாக்குரிமையை கொண்டுள்ளதால் வவுனியா மாநகரசபையில் போட்டியிட்டமை மற்றும் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டமைக்கு எதிராக வவுனியா மாநகரசபை உறுப்பினர்கள் இருவர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

தொடர்பான வழக்கு 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

சிறீடெலோ அமைப்பின் ஊடாக நியமிக்கப்பட்ட பிரதி தவிசாளருக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments