கிவில் ஓயாவும் பறிபோகின்றது?
திரிவைச்சகுளம் ஆக்கிரமிப்பைத்தொடர்ந்து கிவில்ஓயா திட்டத்தின் ஊடாக மிகப்பெரிய ஆபத்தினை வவுனியா வடக்கு சந்திக்கின்றமை அம்பலமாகியுள்ளது. அத்திட்டத்திற்காக தமிழ் மக்களிற்கு சொந்தமான 5260 ஹெக்டெயர் காணிகள் அபகரிக்கப்படுகின்றது.
இதனிடையே வவுனியா வடக்கு, வெடிவைத்தகல்லு கிராமஅலுவலர்பிரிவில் திரிவைச்சகுளத்தை அண்டியபகுதியில் பெரும்பான்மை இனத்தவர்கள் 1000ஏக்கர்வரையில் காடுகளை அழித்து ஆக்கிரமிக்க எடுத்த முயற்சி தமிழ் தரப்புக்களால் தடுத்துநிறுத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனின் வலியுறுத்தலுக்கமைய வனவளத் திணைக்களம், மகாவலி அதிகாரசபை என்பன பாரிய சட்டவிரோத காடழிப்பில் ஈடுபட்டவர்களுக்கெதிராக சட்டநடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
திரிவைச்ச குளம் பகுதியில் தமிழ்மக்களின் காணிகள் பெரும்பான்மையின மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும், அதனை அண்டியபகுதியில் அடர்வனப்பகுதிகள் 1000ஏக்கர்வரையில் பெரும்பான்மை இனத்தவர்களால் அழிக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனால் மகாவலி அதிகாரசபையின் (எல்)வலய திட்ட அதிகாரியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதன்போது மகாவலி (எல்)வலயத் திட்ட அதிகாரி கருத்துத் தெரிவிக்கையில் திரிவைச்சகுளம் பகுதியில் தமிழ் மக்கள் தமது பூர்வீககாணிகள் என உரிமை கோரும் பகுதியை மகாவலி அதிகாரசபை 10பெரும்பான்மை இனத்தவர்களுக்கு கடந்த 2022ஆம் ஆண்டு ஒரு போகத்திற்கு நெற்செய்கை மேற்கொள்வதற்கு குத்தகை அடிப்படையில் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டது.
அப்பகுதி மற்றும் அதனை அண்டிய 1000ஏக்கர்வரையில் பெரும்பன்மை இனத்தவர்களால் அடர்வனங்கள் அழிக்கப்பட்ட பகுதி என்பன மகாவலி ( எல்) திட்டத்தின் கிவுல் ஓயாத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அத்தோடு பெரும்பான்மை இனத்தவர்களால் அடர்வனப் பகுதி அழிக்கப்பட்ட விடயத்தில் குற்றவாளிகள் உடனடியாகத் தண்டிக்கப்படவேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மகாவலி அதிகாரசபை அணிகாரியை வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தலைமையிலான குறித்த குழுவினர் நெடுங்கேணி வனவளத்திணைக்கள அலுவலகத்திற்குச்சென்றனர். அங்கு வனவளத்திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைதொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினரால் கேள்விஎழுப்பப்பட்டது.
இதன்போது நெடுங்கேணி வனவளத் திணைக்கள அதிகாரி பதிலளிக்கையில்,
நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் திரிவைச்சகுளம் பகுதிக்கு களவிஜயம் மேற்கொண்டு தம்மிடம் முறைப்பாடு வழங்கியதற்கமைய, தாம் குறித்த பகுதிக்கு நேரடியாகச்சென்று நிலமைகளைப் பார்வையிட்டதாகவும், 1000ஏக்கர் வரையில் அடர்வனப்பகுதிகள் அழிக்கப்பட்டிருப்பதை தாமும் உறுதிப்படுத்திக்கொண்டதாக நெடுங்கேணி வனவளத்திணைக்கள உத்தியோகத்தரால் தெரிவிக்கப்பட்டது.
மகாவலி அதிகாரசபை குத்தகை அடிப்படையில் ஒருபோகத்திற்கு பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த பத்துப்பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருப்பதும், அதன்பிற்பாடு குறித்த அந்தர்வெவ கமக்கார அமைப்பாக பதிவுசெய்யப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
அத்தோடு குறித்த பகுதியை நெடுங்கேணி கமநலசேவைநிலயம் அளவீடுகளை மேற்கொண்டு பெரும்பான்மை இனத்தவர்களின் அந்தர்வெவ கமக்கார அமைப்பாக பதிவுசெய்வதற்கு வெடிவைத்தகல்லு கிராமஉத்தியோகத்தர், வவுனியாவடக்கு பிரதேசசெயலர் ஆகியதரப்பினர் துணையாகச் செயற்பட்டிருப்பதும் ஆய்வுகளில் வெளிவந்துள்ளது.
Post a Comment