30 :யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு!



 வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளின் உரிமையாளர்கள், எதிர்வரும் 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

முன்னதாக வடக்கில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இன்று கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றிருந்தது.

வலிகாமம் வடக்கில் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளது உரிமையாளர்களுடன் வடக்கு மாகாணத்தில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளின் உரிமையாளர்களும் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இலங்கை இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட “மூதாதையர் நிலங்களை இலங்கை அரசு திருப்பித் தர வேண்டும்“ என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டம் இடம்பெற்றிருந்தது.

இந்தப் போராட்டத்தில் பொது மக்கள், மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

தேர்தல் கால அறிவிப்பாக பலாலியில் 30வருடங்களிற்கு மேலாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வீதிகள் சிலவற்றை அனுர அரசு அண்மையில் திறந்துவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



No comments