மட்டக்களப்பு புதைகுழி அம்பலம்!



இலங்கை கடற்படையினால் கிழக்கில் பேணப்பட்ட மனித புதைகுழிகள் பற்றிய தகவல்கள் வெளிவரத்தொடங்கியுள்ளது. சிங்கள ஊடகவியலாளர் எக்னெலிகொட கடத்தி இறுதியில் மட்டக்களப்பில் கொலை செய்து புதைக்கப்பட்டமையும் கண்டறியப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் எக்னெலிகொட எவ்வாறு கொலை செய்யப்பட்டார், அவர் கொலை செய்யப்பட்ட இடம், உள்ளிட்டவற்றை முன்னாள் கடற்படை சிப்பாய் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார்.

2018 ஆம் ஆண்டு இறுதியில் நியூசிலாந்துக்கு தொழில் விசாவில் சென்று அரசியல் தஞ்சம் கோரிய முன்னாள் கடற்படை சிப்பாயான பிரசன்ன பியசாந்தவே உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார்.

2010 ஆண்டு கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட சுட்டுக் கொல்லப்பட்டதையும் அவரின் சடலத்தையும் தான் கண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு கோட்டைக்கு அழைத்துவரப்பட்ட பிரகீத் எக்னெலிகொட கோட்டையில் இருந்த பாழடைந்த அறைக்கு தழுத்து சென்றதை நான் பார்த்ததாக கடற்படை சிப்பாய் தெரிவித்துள்ளார்.

சுட்டுக் கொல்லப்பட்ட நபரை துக்கி வந்து கடற்படை படகில் வைத்தனர். அப்போது நான் பார்த்ததில் அவரின் கழுத்தில் சூட்டு காயங்கள் காணப்பட்டது.

பின்னர் என்னை அருகில் இருந்த தீவை நோக்கி படகை செலுத்த சொன்னார்கள். படகில் மண்வெடிகளும் இருந்தது. என்னை படகில் இருக்க சொல்லிவிட்டு சடலத்தை தூக்கி சென்று சில நிமிடங்களில் திரும்பி வந்தனர்.

பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட செய்திகள் ஊடகங்களில் வெளியான பின்னரே நான் பார்த்த மற்றும் சுட்டுக் கொல்லப்பட்ட நபர் எக்னெலிகொட என அறிந்து கொண்டேன்” எனவும் கடற்படை சிப்பாய் தெரிவித்துள்ளார்


No comments