அருச்சுனாவிற்கு ஆபத்தில்லையாம்?
யாழ்.மாவட்ட சுயேட்சைக்குழு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க இடைக்காலத் தடை விதிக்க நீதிமன்று மறுதலித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் உறுப்பினர் பதவியை இரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (2) அனுமதி வழங்கியிருந்தது.
எனினும், நாடாளுன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பது மற்றும் வாக்களிப்பதை தடுக்கும் வகையில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பிக்கப் போவதில்லை என்று நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் மாயாதுன்னே கொரயா மற்றும் மஹேன் கொபல்லாவ ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
சிங்கள சிவில் செயற்பாட்டாளர் ஒருவரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அரச மருத்துவராக ஊதியம் பெறும் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக அங்கம் வகிக்கமுடியாதென தெரிவிக்கப்பட்டிருந்தது.
இராமநாதன் அர்ச்சுனாவுக்காக ஆஜரான சட்டத்தரணி சேனானி தயாரத்ன, தனது கட்சிக்காரர் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது சம்பளம் இன்றி சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதால், அவரை ஒரு அரசாங்க ஊழியராகக் கருத முடியாது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இரு தரப்பினரும் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானித்தது.
அத்துடன் மனுவை ஓகஸ்ட் முதலாம் ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிமன்றம் அறிவிததுள்ளது.
Post a Comment