இன்றும் புதிதாக நான்கு!



செம்மணி மனிதப்புதைகுழியில் இன்றைய தினமான புதன்கிழமையும் தொடர்ந்த அகழ்வில் 04 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்படுள்ளது .

செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்டம் ஏழாம் நாள் அகழ்வு இன்றையதினமும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

யாழ் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஆனந்தராஜாவின்  மேற்பார்வையில் தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ்சோமதேவா சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் பங்கேற்போடு அகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதுவரை 30 முழுமையான மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. மேலதிகமாக 04 மனித எச்சங்கள் பகுதியளவில் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 04 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. 

ஏற்கனவே தொல்லியல் பேராசியர் ராஜ் சோமதேவாவால் செய்மதி படம் மூலம் சந்தேகத்துக்குரிய பிரதேசம் என அடையாளம் காணப்பட்ட பகுதியை தோண்டும் நடவடிக்கை இன்று யாழ் பல்கலை கழக தொல்லியல் துறை மாணவர்களின் பங்கெடுப்போடு  முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ள செம்மணி புதைகுழியில் இதுவரையாக 38 மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள போதும் இவ்வெண்ணிக்கை அதிகரிக்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.


No comments