செம்மணி புதைகுழியில் இருந்து 30 எலும்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது


செம்மணி புதைகுழியில் இருந்து சிறுவர் ஒருவரின் எலும்பு கூட்டு தொகுதி என நம்பப்படும் எலும்பு கூட்டு தொகுதியுடன் நான்கு எலும்பு கூட்டு தொகுதி இன்றைய தினம் புதன்கிழமை அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் ஏழாம் நாள் பணிகள் இன்றைய தினம் புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

அதன் போது, 4 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 4 எலும்பு கூட்டு தொகுதிகள் பின்னி பிணைந்து குழப்பகாரமான முறையில் காணப்படுவதனால் அவற்றினை அகழ்ந்து எடுப்பதில் அகழ்வு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் சவால்களை எதிர்கொண்டுள்ளனர். 

அதேவேளை , இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக அகழ்வு பணிகளின் போது, மேலும் நான்கு எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 

அதன் அடிப்படையில் இதுவரையில்  சிறுவர்களுடைய எலும்பு கூட்டு தொகுதி உட்பட 30 எலும்பு கூட்டு தொகுதிகள்  முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. 

அடையாளம் காணப்பட்ட ஏனைய எலும்பு கூட்டு தொகுதிகளை அகழ்ந்து எடுக்கப்படும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளது. 

அதேவேளை பேராசிரியர் ராஜ் சோமதேவாவால், செய்மதி படங்கள் மூலம் சந்தேகத்திற்குரிய பிரதேசம் என அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் யாழ் . பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவர்களின் பங்கேற்புடன் அகழ்வு பணிகள் இன்றைய தினம் புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் சந்தேகத்திற்கு உரிய இடமாக அடையாளப்படுத்தப்பட்ட  ஏனைய இடங்களில் அகழ்வு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக அவற்றை துப்பரவு செய்யும் பணிகளும் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது. 






No comments