மேற்குக் கரையை கைப்பற்றுவதற்கான இது நல்ல வாய்ப்பு - இஸ்ரேல் நிதி அமைச்சர்


தற்போதைய காலம் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையைக் கைப்பற்றுவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பை வழங்குவதாக நீதி அமைச்சர் யாரிவ் லெவின் கூறுவதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தற்போதைய பிரச்சினைகளுக்கு அப்பால் இதை நாம் தவறவிடக்கூடாத வரலாற்று வாய்ப்பின் காலம் எனக் கூறினார்.

இறையாண்மைக்கான நேரம் வந்துவிட்டது. இறையாண்மையைப் பயன்படுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது. இந்த விஷயத்தில் எனது நிலைப்பாடு உறுதியானது அது தெளிவாக உள்ளது என்றார்.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை 1967 முதல் இஸ்ரேலிய இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளது. ஆனால் அது ஒருபோதும் முறையாக இணைக்கப்படவில்லை. தீவிர வலதுசாரி அமைச்சர்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்த ஒரு வாய்ப்பு இருப்பினும், அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸின் தாக்குதல் மற்றும் அதைத் தொடர்ந்து காசா மீதான போருக்குப் பின்னரான இஸ்ரேலிய அதிகாரிகள் பாலஸ்தீன பிரதேசத்தின் வரைபடத்தை மீண்டும் புதிதாக வரைந்து வருகின்றனர்.

No comments