ஈழத்தமிழர்களுக்கு கரிநாள் - இலங்கையின் சுதந்திர தினத்தில் லண்டனில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
ஈழத்தமிழர்களுக்கு இலங்கையின் சுதந்திர தினம் ஒரு கரி நாள் என்று கூறியும் ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசு மேற்கொண்டுவரும் படுகொலைகள்
ஸ்ரீலங்கா உயர்ஸ்தானிகரகத்திலிருந்து பிரித்தானிய பிரதமர் அலுவலகம் வரைக்கும் பேரணியாக சென்ற புலம்பெயர் தமிழ் உறவுகள் கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்
புலம்பெயர் தமிழர்களால் மேற்கொள்ளப்பட்டிருந்த இந்த போராட்டத்தில் இனவழிப்பு அரசாங்கத்திற்கு தண்டனை வழங்க கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது
இதில் பெருந்திரளான புலம்பெயர் தமிழர்கள் கலந்து கொண்டு ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கு எதிரான தமது எதிர்ப்பை முன்னெடுத்திருந்தனர் .










Post a Comment