யாழில். இனம்தெரியாத நபர்களின் கத்திக்குத்துக்கு இலக்கானவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் உள்ள மதுபான சாலைக்கு அருகில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தாவடி பகுதியில் உள்ள மதுபான சாலைக்கு அருகில் நேற்றைய தினம் புதன்கிழமை மாலை இடம்பெற்ற குறித்த தாக்குதல் சம்பவத்தில் , சுதுமலை பகுதியை சேர்ந்த நேசராஜன் சர்வேந்திரன் (வயது 51) என்பவரே படுகாயமடைந்த நிலையில் , யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள் குறித்த நபர் மீது கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டு தப்பி சென்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Post a Comment