வெளியே வந்த மகிந்த,கோத்தா!
இன அழிப்பிற்கு நீதி கோரிய தமிழ் மக்கள் போராட்டம் தொடர்கின்ற நிலையில் யுத்தத்தில் உயிரிழந்த இலங்கை படையினரை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நாடாளுமன்ற மைதானத்திற்கு அருகே அமைந்துள்ள போர்வீரர் நினைவுச்சின்னத்திற்கு அருகில் இன்று செவ்வாய்க்கிழமை (20) காலை நடைபெற்றுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட உறுப்பினர்கள் நினைவேந்தலில் பங்கெடுத்திருந்தனர்.
இதனிடையே நாடாhளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் தமிழ் தேசிய பேரவையினர் அமெரிக்கா, சுவிஸ் நாடுகளின் தூதுவர்களை அவர்களின் தூதரகங்களில் இன்று செவ்வாய்க்கிழமை (20) சந்தித்துள்ளனர்.
தூதுவர்களுடனான சந்திப்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், தமிழரசு கட்சி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவான், பங்கெடுத்திருந்தனர்.
இதனிடையே நேற்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற இலங்கை இராணுவத்தின் போர் வெற்றி விழா நிகழ்வில் பங்கெடுக்க ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க மறுதலித்துள்ளார்.
படையினரது நிகழ்வில் பங்கெடுப்பது இன ஒற்றுமையை பாதிக்குமெனவும் அனுர தெரிவித்துள்ளார்.
Post a Comment