சுமந்திரன் படம் காட்டவேண்டாம்:சிவாஜி!
உள்ளுராட்சி தேர்தலில் வெற்றிபெற தமிழரசுக்கட்சியை சார்ந்த ஒருசில ஆதாரவாளர்கள் மதுபானம் வழங்கினார்கள். ஆனால் தமிழரசுக் கட்சி தலைமைப்பீடம் அதனை செய்யுமாறு கோரியிருக்காது. எங்களுக்கு அது நன்கு தெரியும்.நான் கூறிய கருத்துக்கள் யார் மனதையும் புண்படுத்தியிருந்தால் அதற்காக எனது மனவருத்தத்தை தெரிவிக்க கடமைபட்டிருக்கிறேன் என தெரிவித்துள்ளார் சிவாஜிலிங்கம்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் வல்வெட்டித்துறை நகரசபையில் நான் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டால் நான்கு வருடங்களும் தவிசாளராக இருக்கப்போவதில்லை. தவிசாளர் பதவி உட்பட அனைத்து உறுப்பினர்களையும் சுழற்சி முறையில் மாற்றம் செய்வோம். ஒரு முன்மாதிரியான இளைஞர்களை உருவாக்கிவிட்டு செல்லவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம் எனவும் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த வல்வெட்டித்துறை நகரசபை தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து தமிழ் மக்கள் பேரவையாக சிவாஜிலிங்கம் போட்டியிட்டிருந்தார்.அவர் சார்ந்த கட்சி கூடிய ஆசனங்களை பெற்றிருந்த போதும் ஆட்சியமைக்க தமிழரசு முற்பட்டுள்ளது. தமிழரசுக்கட்சி தேர்தல் வெற்றிக்காக மதுபானம் வழங்கியதாக சிவாஜிலிங்கம் தெரிவித்த குற்றச்சாட்டுக்கள் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.
இதனிடையே எம்.ஏ.சுமந்திரன் சிவாஜிலிங்கம் தவிசாளராக பதவியேற்கவிடாது சதிகளில் ஈடுபட்டுள்ளார்..
இந்நிலையிலேயே எம்.ஏ.சுமந்திரன் எங்களுக்கு படம் காட்ட வேண்டாம். ஆயுதப் போராட்டத்தை சந்தித்தவர்கள் நாங்கள் எனவும் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
Post a Comment