சீ.வீ.கேயிற்கும் ஒரு கண்!
நடப்பதற்குச் சாத்தியமே இல்லாத மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் எம்.ஏ.சுமந்திரனிடம் கேள்வி கேட்டபோதே தான் போட்டியிடவுள்ளதாக எம்.ஏ. சுமந்திரன் பதிலடி கொடுத்துள்ளார். ஆகவே, இப்போது அதைப் பற்றி பேசுவதில் அர்த்தம் இல்லை. அதையே திரும்பத் திரும்பப் பேசி குழப்ப வேண்டாம் என பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெவித்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் எம்.ஏ.சுமந்திரனிடம் கேள்வி கேட்டபோதே சுமந்திரன் தானே முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடப் போவதாகப் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக இந்த வருடம் அந்தத் தேர்தல் நடைபெறாது. ஏனெனில் அதற்கு வரவு செலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கப்படவில்லை. ஆனாலும் மாகாண சபைத் தேர்தல் ஒன்று வருகின்றபோது அதில் நாங்கள் ஒருவரை நிறுத்துவோம்.
உண்மையில் மாகாண சபை தேர்தல் என்பது நடக்க வேண்டியதுதான். ஆனால் அது நடைபெறுவதற்கான சாத்தியங்கள் இல்லாத நிலையில் கூட ஒற்றுமையைக் குலைக்கும் சதி வேலைகள் தற்பொழுதே முன்னெடுக்கப்படுகின்றனவெனவும் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
Post a Comment