முன்னாள் எம்.பி மிலானுக்கு பிணை
இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் இன்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மிலான் ஜெயதிலக்கவை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
காணியொன்றின் வரைபடத்திற்கு அனுமதி வழங்கும்போது இடம்பெற்ற முறைகேடு காரணமாக அரசாங்கத்திற்கு இழப்பு ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டு, அவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இவர் தொம்பே பிரதேச சபையின் தலைவராக இருந்த காலப்பகுதியில் மேற்படி சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment