சிற்றூர்தி விபத்து: 14 பள்ளிச் சிறுவர்கள் காயம்!


இத்தினபுரி மாவட்டத்தில் உள்ள குருவிட்ட காவல் பிரிவின் சாயகந்த பகுதியில், எரட்டவிலிருந்து சாயகந்த நோக்கிச் சென்ற சிற்றூர்தி ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள மரத்தில் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து நடந்தபோது சிற்றூர்தியில் 11 முதல் 14 வயதுக்குட்பட்ட 14 பள்ளி குழந்தைகளும். ஒரு பெண்ணும் பயணம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காயமடைந்த 14 பள்ளி குழந்தைகளும், ஓட்டுநரும் எரட்டா கிராமப்புற மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பத்து பள்ளி குழந்தைகள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 

அதே நேரத்தில் இரண்டு சிறுவர்கள், இரண்டு சிறுமிகள் மற்றும்  ஓட்டுநர் மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை குருவிட்ட காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments