சிறந்த படம் அனோரா: ஐந்து ஆஸ்கார் விருதுகளை வென்றது

அனோரா படத்திற்கான சிறந்த நடிகை மைக்கி மேடிசன்

2025 ஆம் ஆண்டுக்கான அகாடமி விருதுகளில் சிறந்த படத்திற்கான ஆஸ்கார் விருதை அனோரா திரைப்படம் வென்றது.

இந்தப் படத்தை சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கார் விருதை வென்ற சீன் பேக்கர் இயக்கியுள்ளார்.

மேலும், சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்ற 26 வயதான மைக்கி மேடிசன். அனோரா படத்தில் நடித்ததற்காக ஆஸ்கார் விருதை வென்றார்.

அனோரா என்பது 2024 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க காதல் நகைச்சுவை நாடகத் திரைப்படமாகும். சீன் பேக்கர் இது எழுதி. இயக்கி, தொகுத்துள்ளார்.

படத்தை இயக்கிய  சீன் பேக்கர்

இத் திரைப்படம் ஐந்து ஆஸ்கார் விருதுகளை வென்றது. 

* முதலாவது விருது சிறந்த படமான அனோராவுக்கு கிடைத்தது.

* இரண்டாவது விருது சிறந்த நடிகைக்கான விருது மைக்கி டிசன பெற்றார்.

* மூன்றாவது விருதை சிந்த இயக்குநராக சீன் பேக்கர் பெற்றார்.

* நான்காவது விருதை சிறந்த கதையாசிரியராக சீன் பேக்கர் பெற்றார்.

* ஐந்தாவது விருது அனோரா படத்தின் சிறந்த எடிட்டிகும்  சீன் பேக்கர் விருதை வென்றார்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற 97வது அகாடமி விருதுகளில் அட்ரியன் பிராடி 'சிறந்த நடிகர்' விருதை வென்றார்.

அது 'தி ப்ரூடலிஸ்ட்' படத்தில் அவரது நடிப்பிற்காகக் கிடைத்தது.

இது அவரது இரண்டாவது ஆஸ்கார் விருதாகும். இதற்கு முன்பு "தி பியானிஸ்ட்" படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதை வென்றுள்ளார்.

* சிறந்த துணை நடிகர் – கீரன் கல்கின்  (The Real Pain திரைப்படம்)
* சிறந்த துணை நடிகை – ஜோ சல்டானா (Emilia Perez திரைப்படம்)
* சிறந்த சர்வதேச திரைப்படம் – ஐயம் ஸ்டில் ஹியர் (I’m Still Here திரைப்படம்) பிரேசில் நாட்டுக்கு கிடைத்தது.

இடமிருந்து: அட்ரியன் பிராடி, மைக்கி மேடிசன், கீரன் கல்கின் மற்றும் ஜோ சல்டானா


* சிறந்த தழுவல் திரைக்கதை – கான்க்ளேவ் (Conclave)

*சிறந்த ஒரிஜினல் இசை – தி புருடலிஸ்ட் (The brutalist).

* சிறந்த ஒளிப்பதிவு – தி புருடலிஸ்ட் (The brutalist)

* சிறந்த ஒலி அமைப்பு – டியூன் 2 (Dune 2)

* சிறந்த விஷுவல் எபெக்ட் – டியூன் 2 (Dune 2)
* சிறந்த அனிமேஷன் திரைப்படம் – ஃப்ளோ (Flow)
 * சிறந்த அனிமேஷன் குறும்படம் – இன் தி ஷேடோ ஆஃப் தி சைப்ரஸ் (In the Shadow of the Cypress)

* சிறந்த ஆவணப்படம் – நோ அதர் லேண்ட்

* சிறந்த ஆவண குறும்படம் - தி ஒன்லி கேர்ள் இன் தி ஆர்கெஸ்ட்ரா

* சிறந்த ஒரிஜினல் பாடல் – எமிலியா பெரெஸின் (Emilia Perez) எல் மால் (El Mal )

* சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு (Production Design) – விக்கெட் (Wicked).

* சிறந்த ஒப்பனை – சப்ஸ்டன்ஸ் (Substance)
* சிறந்த உடை – போல் டேஸ்வெல் - விக்கெட் (Wicked)

No comments