இலங்கைக்கான படையெடுப்பு?



தென்னிந்திய நடிகர்களது இலங்கைக்கான படையெடுப்பு தொடர்கின்றது. இந்நிலையில் இந்திய நடிகரும் தயாரிப்பாளருமான ஜெயம் ரவி என்றழைக்கப்பட்ட ரவி மோகன் மற்றும் பாடகி கெனீஷா பிரான்சிஸ் ஆகியோருடன் வெளிவிவகார அமைச்சர் விஜிதஹேரத் கலந்துரையாடியுள்ளார்.

திரைப்பட தயாரிப்பு மற்றும் இசை நிகழ்ச்சிகளில் புதிய திட்டங்களைப் பற்றி இதன்போது கலந்துரையாடியதாக அமைச்சர் தனது எகஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இலங்கையின் திரைப்பட சுற்றுலா மற்றும் கலாச்சாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் கலந்துரையாடல் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

No comments