யேர்மனியில் மக்கள் கூட்டம் மீது மகிழுந்து மோதியது: 2 பேர் பலி! மேலும் பலர் காயம்!


யேர்மனியின் மன்ஹெய்மில்  நகரில்  பாதசாரிகள் பகுதிக்குள் மகிழுந்து ஒன்று சென்று மோதியதில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் பலர் காயமடைந்தனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம், நகர மையப் பகுதியில் உள்ள ஒரு பெரிய சதுக்கமான பராடெப்ளாட்ஸில் நண்பகல் நடந்தது.

பாராடெப்ளாட்ஸ் திசையில் தண்ணீர் கோபுரத்திலிருந்து வந்து கொண்டிருந்த மக்கள் கூட்டத்தின் மீதே அதிவேகமாகச் சென்று கறுப்பு நிற மகிழுந்து மோதியது. 

காயமடைந்த இரண்டு பெரியவர்கள் மற்றும் ஒரு குழந்தையும் மன்ஹெய்ம் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிற்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மன்ஹெய்மில் உள்ள பொதுமக்கள் நகர மையப்பகுதியைத் தவிர்க்குமாறு தெரிவிக்க, அதிகாரிகள் கேட்வார்ன் செயலியில் எச்சரிக்கையை அனுப்பினர். பெரிய அவசரநிலைகள் பற்றிய தகவல்களைத் தெரிவிக்க அதிகாரிகள் இந்த செயலியைப் பயன்படுத்துகின்றனர். 

சந்தேக நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு  காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்துடன் வேறு யாராவதும் ஈடுபட்டார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பகுதி வெளியேற்றப்பட்டது, குடிமக்கள் நகர மையத்தை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நகர மையத்தில் உள்ள கார்னிவல் சந்தை மூடப்பட்டுள்ளது .

யேர்மனியில் பகுதிகளிலும் கார்னிவல் அணிவகுப்புகள் நடைபெறுகின்றன. நேற்று ஞாயிற்றுக்கிழமை மன்ஹெய்மின் இந்த அணிவகுப்பு நடத்தது.

முனிச்சில் ஒரு கார் மோதியதில் இரண்டு பேர் கொல்லப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளது.


No comments