கல்கிஸ்ஸ பகுதியில் துப்பாக்கிச் சூடு - இருவர் உயிரிழப்பு
கல்கிஸ்ஸ, வட்டரப்பல வீதி பகுதியில் துப்பாக்கிதாரியினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர்கள் கல்கிஸ்ஸ வட்டரப்பல வீதியைச் சேர்ந்த 36 மற்றும் 20 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கான காரணம் இதுவரையில் தெரியவராத நிலையில், சந்தேகநபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment