இங்கிலாந்தில் தொடருந்து வலையமைப்பில் இடையூறு: 9 வழித்தடத்தில் சேவைகள் பாதிப்பு!
இங்கிலாந்தின் தொடருந்து வலையமைப்பில் ஏற்பட்ட பெரும் இடையூறு காரணமாக இன்ற வெள்ளிக்கிழமை காலை குறைந்தது ஒன்பது வழித்தடங்களில் தாமதம் ஏற்பட்டது.
தொடருந்து ஓட்டுநர்கள் மற்றும் சமிக்ஞையாளர்கள் இடையே பயன்படுத்தப்படும் தொடர்பாடல் அமைப்பில் ஏற்பட்ட பிழை அல்லது சேதம் காரணமாக இந்த பிரச்சனை ஏற்பட்டதாக தேசிய தொடருந்து நிறுவனம் கூறியது. இந்தச் சிக்கல் தற்போது சரி செய்யப்பட்டுள்ளது.
எலிசபெத் லைன், கேட்விக் எக்ஸ்பிரஸ், கிரேட் நொர்தர்ன், நொர்தர்ன், ஸ்கொட்ரெயில், தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு ரயில்வே மற்றும் தேம்ஸ்லிங்க் சேவைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன.
மான்செஸ்டர் பிக்காடில்லி, லண்டன் பேடிங்டன் மற்றும் சவுத்தாம்ப்டன் சென்ட்ரல் போன்ற இங்கிலாந்தின் சில முக்கிய போக்குவரத்து மையங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் பயணங்கள் தாமதமாகியது.
குறுகிய அறிவிப்பில் சில சேவைகளை இரத்து செய்ய பயணிகள் திட்டமிட வேண்டும் என்று தேசிய தொடருந்து கூறியது.
Post a Comment